வீட்டு / குடும்ப  வன்முறையிலிருந்து உதவி பெறுங்கள்

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில்  உள்ள இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் முதலிய தெற்காசிய தேசத்தில் இருந்து குடிபுகுந்தவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப வன்முறையிலிருந்து இலவச உதவி பெற மைத்ரியை அணுகுங்கள்.

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த எவருக்கோ குடும்ப வன்முறையில் இருந்து உதவி தேவையா?

 +1 (888) 862 - 4874 தொலை பேசி எண்ணை கூப்பிடுங்கள்   

காலை 9 மணியில் இருந்து மாலை 3 மணி வரை வாரநாட்கள் கூப்பிட்டால் மைத்ரியை சார்ந்த யாராவது உங்களுடன் பேசி, உதவத் தயாராக இருப்பார் . இல்லையெனில், நீங்கள் ஒரு பாதுகாப்பான தொலைபேசி எண் மற்றும் பாதுகாப்பான நேரம், விரிவான செய்தியைப் பதிவு செய்யுங்கள். 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க முயற்சி செய்வோம்.

இது ஒரு அவசரகால / ஆபத்தான நிலைமையாக இருந்தால் உடனடியாக போலீஸ் உதவிக்கு தொலை பேசியில் 911ஐ கூப்பிடுங்கள்.  பேச முடியாது நிலையாக  இருந்தாலும் 911ஐ   கூப்பிட்டு தொலை பேசியை துண்டிக்க  வேண்டாம். போலீஸ் உதவி உடனடியாக வரும். 

குடும்ப வன்முறையில் இருந்து உதவி பெற மைத்ரியை அணுகுங்கள். ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டாலும் பல தெற்கு ஆசிய பாஷையில் பேசி எங்களால் உதவி செய்ய முடியும்.